ஐயோ!! ஐயோ!!

வணக்கம் !!! தமிழ் மக்களை .............!

05 September 2007

jokes found in msn india

கிறுக்கியது : கோபிநாத்

என்னப்பா சர்வர், சீக்கிரமா வடை கொண்டு வரச் சொன்னா, ரொம்பவும் மெதுவாகக் கொண்டு வர்றியே ஏன்?""நீங்க கேட்டது மெதுவடையாச்சே, சார். மெதுவாகத்தானே கொண்டு வரமுடியும்!"----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்க அப்பா என்னை அடிச்சதால ஏற்பட்ட காயத்துக்கு எங்கம்மா 'பத்து' போட்டாங்க!""உங்க அப்பா ஏன் அடிச்சார்?""நான் எல்லா பாடத்திலேயும் `பத்து' மார்க் தான் வாங்கியிருந்தேன்!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"கறையான் தொல்லையைப் போக்க பல வழிகள்னு ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகச் சொன்னீங்களே, வெளியிடவில்லையே ஏன்?""கையெழுத்துப் பிரதியைக் கறையான் தின்னுடுச்சு, அதான்!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அவர் பண்ணுகிற வியாபாரத்திலே சாண் ஏறினா முழம் சறுக்குதுன்னு சொல்றீங்களே, அப்படி அவர் என்ன வியாபாரம் பண்றார்?""பூ வியாபாரந்தான்!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எங்கப்பா என்னை எப்பவும் 'மைசன்' 'மைசன்'னு அன்பாகக் கூப்பிடுவார்! ஆமா உங்கப்பா எப்படி?""'பைசன்' 'பைசன்'னுதான் கூப்பிடுவார்!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நாதஸ்வர வித்வானோட மகனுக்கும், பஸ் கண்டக்டரோட மகளுக்கும் கல்யாணம்! ஜோடிப் பொருத்தம் பிரமாதம்!""எப்படி சொல்றீங்க?""ரெண்டு பேருமே ஊதற குடும்பத்தைச் சேர்ந்தவங்களாச்சே!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அந்த போலீஸ்காரருக்கு மாதம் மும்மாரி பொழிகிறது!""அதெப்படி?""கேப்மாரி, சோமாரி, மொள்ளமாரி மூன்று பேரும் மாதா மாதம் மாமூலைக் கொண்டு வந்து கொட்டுறாங்களே!"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 கருத்துக்கள்: